நான் சிறுமியாக இருந்தபொழுது பத்திரிகைகள் படிக்க மட்டுமின்றி பத்திரிகைகளுக்கு எழுதுவதிலும் நாட்டம் அதிகம் இருந்து வந்தது.பற்பல பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள் எழுத ஆரம்பித்து நாளடைவில் குறிப்புகள் கொடுக்கவும் ஆரம்பித்தேன்.நான் அனுப்பும் குறிப்புகள் வெளியான உற்சாகத்தில் என் பதின்ம வயதில் நான் எழுதிய முதல் கட்டுரை வெளியாகி வந்த பக்கங்களை படித்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சி இன்னும் என் நினைவில் நிற்கின்றது.
வரதட்சணை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையைத்தொடர்ந்து பல மாதங்களாக பல்வேறு தலைப்பிலும் என் கட்டுரைகள் ஜமாஅத்துல் உலமா மாத இதழில் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது.என் எழுத்தார்வத்திற்கு வித்திட்டு உரம் போட்டு வளர்த்தவர்கள் மறைந்த பெரியவர்,ஜமாஅத்துல் உலமா மாத இதழ் ஆசிரியரும் மர்ஹூம் அல்லாமா அபுல்ஹசன் ஷாதலி சாஹிப் அவர்களை இன்னேரம் நன்றியுடன் நினைவில் கொள்கின்றேன். பல வருடங்களுக்கு முன் வெளியான என் முதல் கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி கட்டுரையைப்படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்த்து எழுதுங்கள் சகோதரி. வாழ்த்துக்கள்..
ReplyDelete//படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி கட்டுரையைப்படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். //
இங்கு படங்கள் ஒன்றுமில்லையே?